குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள அஞ்சார் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் அருணா ஜாதவ் . இவர் வெள்ளிக்கிழமை இரவு அவருடைய வீட்டில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது தன்னுடைய லிவிங் பார்ட்னரால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதனைய டுத்து மறுநாள் காலை குற்றம் சாட்டப்பட்ட சிஆர்பிஎஃப் வீரரான அவருடைய லிவிங் பார்ட்னர் திலீப் டாங்கியா அருணா பணிபுரிந்த அதே காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
அதாவது சம்பவத்தன்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் அருணாவை கருத்தை நெரித்து கொலை செய்ததாக திலீப் கூறியுள்ளார். 2021 ஆம் வருடம் இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமாகி அப்போது முதல் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
