வேளாண் அமைச்சருக்கு வேலை இல்லையா..? சட்டமன்ற கூட்டத்தொடரில் ரம்மி விளையாடுறாரே… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

By Soundarya on ஆடி 20, 2025

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் விவசாயத்துறை அமைச்சர் மாணிக் ராவ்  கோக்டே சட்டமன்ற கூட்டத்தொடரின் பொழுது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ ஆனது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆளும் கூட்டணியில் உள்ள அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசைச் சேர்ந்தவர்தான் மாணிக் ராவ்  கோக்டே . இவர் எதிரணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்  பவரின் பேரன் ரோஹித் பவார் தான் இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில், “ஆளும் கூட்டணியில் தேசியவாத கட்சி பாஜகவை கலந்து கொள்ள சேர்க்காமல் எதுவும் செய்ய முடியாது. மாநிலத்தில் தினசரி எட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும்போதும் வேளாண் அமைச்சருக்கு எந்த ஒரு வேலையும் இல்லாததால் ரம்மி விளையாடுவதற்கு நேரம் கிடைத்தது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஏழைகளின் வயல்களுக்கு எப்போதாவது வாருங்கள் மகாராஜாவே” என்றும் கூறியுள்ளார்.