காவிரி டெல்டா விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமான மேட்டூர் அணையில் இருந்து நடப்பு ஆண்டிற்கான பாசன நீர், முதல்வர் விஜய்யால் திறந்து வைக்கப்படுகிறது. வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை நீர், அணையில் போதிய நீர்மட்டம் இல்லாத காரணத்தால் இரண்டரை மாதங்கள் தாமதமாகத் தற்போது திறந்து வைக்கப்படுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது. இதன் மூலம் காவிரி படுகையைச் சேர்ந்த 13 மாவட்டங்களில் உள்ள சுமார் 17 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளன.
https://www.instagram.com/reel/Dcu46F9tj_9/?utm_source=ig_web_copy_link&igsi=NTc4MTIwNjQ2YQ==
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் வந்தடைந்த முதல்வர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக மேட்டூர் அணைக்குச் சென்றார். வழிநெடுகிலும் திரண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வர் விஜய்யின் வருகையை முன்னிட்டு சேலத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 3,000-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதல்வராகப் பொறுப்பேற்ற பின் விஜய் மேட்டூர் அணையைத் திறந்து வைப்பது இதுவே முதல்முறையாகும்.
