“என் மனைவி திட்டிட்டா… அப்பா இருந்தா ” படுக்கையில் இருந்த தந்தையை குத்தி கொன்ற மகன்… பதற வைக்கும் பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 1, 2026

Spread the love

சென்னை பெரவள்ளூர் வெற்றி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ராஜேந்திரன் (68) என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுப் படுக்கையிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவரது மகன் நடராஜன் (45) பெயிண்டிங் வேலை செய்து வரும் நிலையில், அவரது மனைவி எழிலா மற்றும் குழந்தைகள் வேளாங்கண்ணி சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பியுள்ளனர். அப்போது மதுபோதையில் இருந்த நடராஜனிடம், படுக்கையிலேயே மலம், சிறுநீர் கழித்திருந்த மாமனாரைக் கவனிக்காதது குறித்து எழிலா கண்டித்துவிட்டுத் தூங்கச் சென்றுள்ளார்.

மனைவி திட்டியதால் ஆத்திரமடைந்த நடராஜன், தந்தை இருப்பதனால்தான் குடும்பத்தில் பிரச்சனை வருகிறது எனக் கருதி, சமையலறையில் இருந்த கத்தியை எடுத்துப் படுக்கையில் இருந்த தந்தை ராஜேந்திரனின் மார்பில் சரமாரியாகக் குத்தியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் திரு.வி.க நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளி நடராஜனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.