தஞ்சாவூர் செங்கிப்பட்டி கூட்டத்தில் விவசாயிகளுக்காகப் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை தவெக தலைவர் விஜய் அறிவித்தார். தவெக ஆட்சிக்கு வந்தவுடன் மாநிலத்தில் உரத்தட்டுப்பாடு என்ற பேச்சிற்கே இடமிருக்காது என்றும், 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கடன்களை 50% வரை ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்ட அவர், நிலமற்ற விவசாயிகள் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்விச் செலவுகளை அரசே ஏற்கும் எனப் பிரகடனப்படுத்தினார். அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதைத் தடுக்க முறையான பாதுகாப்பு வசதிகள் மற்றும் கூடுதல் கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார். விஜய்யின் இந்தத் தேர்தல் வாக்குறுதிகள் டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்…
டெல்லியின் அமர் காலனி பகுதியில் உள்ள மவுண்ட் கைலாஷ் குடியிருப்புப் பகுதியில், மருத்துவர் ஒருவர் தனது வீட்டில் நீண்ட நாட்களாக…
அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மலிவான பயணத்தை வழங்கும் நோக்கில், இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே மாற்றுத்திறனாளிப்…
ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள தூத் தாலாய் பகுதியில், பலத்த காற்று காரணமாக இரண்டு நண்பர்கள் ஜிப் லைனில் 20…
மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தகவல் மையத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கும், ஒரு பயணிக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம்…