கிரேஸி மோகன் இயக்குனர் ராஜமௌலி கிட்ட என்னைப் பத்தி அப்படி சொன்னான்… எமோஷனலாகப் பேசிய நடிகர்!

By vinoth on மார்கழி 25, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் வசனங்களில் வார்த்தை விளையாட்டுகள் நடத்தி நகைச்சுவையை வரவைப்பவர் எழுத்தாளர் கிரேஸி மோகன். நாடக மேடையில் இருந்து சினிமாவுக்கு அழைத்து வரப்பட்டவர் கிரேஸி மோகன். 1989 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன கல்யாணத்துக்கு கல்யாணம், பிரைசில் கிரேசி, விடாத சிரிப்பு உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட நகைச்சுவை தொடர்களிலும் கிரேசி மோகன் வேலை பார்த்துள்ளார்.

கிரேசி மோகன் கிரேசி கிரியேஷன்ஸ் என்ற நாடக நிறுவனத்தை நடத்தினார். அவர் சின்னத்திரை சீரியல்களுக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதி வந்தார். அதன் பின்னர்தான் அவரை சினிமாவுக்கு அழைத்து வந்தார் கமல். அவர் எத்தனையோ படங்களில் பணியாற்றி இருந்தாலும் கமல்ஹாசனோடு அவர் இணையும் படங்கள் காமெடிக்கு 100 சதவீதம் கியாரண்டி.

   

அதற்கு அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், காதலா காதலா, பஞ்சதந்திரம் மற்றும் பம்மல் கே சம்மந்தம் ஆகிய படங்களே சாட்சி. இந்த படங்களின் வசனங்களை மட்டுமே தனியே கேட்டால் கூட விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு இருக்கும்

   

தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகர், வசனகர்த்தா என பன்முகத் திறமை கொண்டவராக இருந்த கிரேஸி மோகன், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பத்தாம் தேதி மாரடைப்பால் கிரேசி மோகன் உயிரிழந்தார். இது தமிழ் சினிமா உலகுக்கு நிச்சயம் ஒரு இழப்புதான்.

 

இந்நிலையில் கிரேஸி மோகன் குறித்து அவரது நெருங்கிய நண்பரான கவிதாலயா கிருஷ்ணன் ஒரு நேர்காணலில் பேசும்போது “கிரேஸி மோகன் எந்த படத்துக்கு வசனம் எழுதினாலும் அந்த இயக்குனர்களிடம் என்னைப் பரிந்துரை செய்வான். அதில் சில இயக்குனர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் சிலர் வேண்டாம் என்றுவிடுவார்கள். அவர்களிடம் ‘உங்களுக்குதான் நஷ்டம்’ என்று சொல்வான். யாரால் அப்படி சொல்ல முடியும்?

அப்படி ராஜமௌலியிடம் ‘நான் ஈ’ படத்தில் என்னை நடிக்க வைக்க சொல்லியுள்ளான். அவர் என்னைத் தெரியாது என சொல்லியுள்ளார். அப்படி என்றால் நீங்கள் ஒரு நல்ல நடிகனை மிஸ் செய்துள்ளீர்கள் எனக் கூறியுள்ளான். அந்த அளவுக்கு என் மேல் அவனுக்கு மதிப்பு” எனக் கூறியுள்ளார்.