நடிகர் பிரேம்ஜி முரட்டு சிங்கிளாகவே காலத்தை கழித்து வந்த நிலையில் இதை பெருமையாக பல இடங்களிலும் பேசி வந்தார். ஆனால் அவரையும் காலம் திருமண பந்தத்தில் சேர்த்து விட்டது. சேலத்தை சேர்ந்த இந்து என்பவரை பிரேம்ஜி சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய அண்ணன் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சென்னை 28 உள்ளிட்ட திரைப்படங்களில் காமெடி கலாட்டா செய்தவர் தான் பிரேம்ஜி. இவர் நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். நடிகர் பிரேம்ஜி பிரபல இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் வெங்கட் பிரபுவின் உடன் பிறந்த தம்பி ஆவார்.
தன்னுடைய அண்ணன் படங்களில் நடித்து தனது டைமிங் காமெடி மற்றும் பாடி லாங்குவேஜால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். இவருடைய கேங்கிலேயே தொடர்ந்து முரட்டு சிங்கிளாக இருந்து வந்தார். இதைப் பெருமையாகவும் பல பேட்டிகளில் இவர் கூறியுள்ளார். இந்த நிலையில் பிரேம்ஜிக்கு சேலத்தை சேர்ந்த இந்து என்ற பெண்ணுடன் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. நட்பாக தொடங்கிய இவர்களுடைய சினேகம் காதலாக மாறி இறுதியாக திருமணத்தில் நிறைவடைந்துள்ளது. திருத்தணி முருகர் கோவிலில் தான் இவர்களுடைய திருமணம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடந்தது. தற்போது பிரேம்ஜி திருமண வாழ்க்கையை மிகச் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்.
இவருடைய மாமியார் சமீபத்தில் பிரேம்ஜி பெயரிலேயே ஒரு புதிய தொழிலை தொடங்கியிருந்தார். இப்படியான நிலையில் பிரேம்ஜியின் மனைவி இந்து தெரிவித்துள்ள விஷயம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதாவது, என்னுடைய திருமண புகைப்படத்தில் எனது அப்பா, அம்மா, தாத்தா மற்றும் பாட்டி புகைப்படங்களை எடிட் செய்து தான் சேர்த்தோம். இதில் என் தம்பி மட்டும் இல்லை. என் தம்பி திருமணத்திற்கும் வரவில்லை. என் தம்பிக்கு என் கணவர் பிரேம்ஜியை பிடிக்கவில்லை. அவரும் எவ்வளவோ என் தம்பியிடம் பேசிப் பார்த்தார். அவன் இன்ட்ரஸ்ட் காமிக்கவில்லை. இப்பதான் காலேஜ் முடிச்சு இருக்கான். இன்னும் மெச்சூரிட்டி வரல. அவனே ரியலைஸ் பண்ணி வருவான்னு விட்டாச்சு என்று இந்து கூறியுள்ளார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.