“பாதி எரிந்த இளம் பெண் உடல்…” 4-வது மனைவியுடன் மாற்று திறனாளி செய்த காரியம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் உக்கிரமன்னன் கோட்டையை சேர்ந்தவர் மிலன்சிங். இவர் மாற்றுத்திறனாளி. இவர் ஏற்கனவே மூன்று பெண்களை திருமணம் செய்து அவர்களை பிரிந்து விட்டார். தற்போது 4-வதாக ஜீவிதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் நெல்லையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுடன் மிலன் சிங்குக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே அந்த இளம்பெண் காணாமல் போனதால் அவரது பெற்றோர் குருவிகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கடந்த 2016-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் பாதி எரிந்த நிலையில் அந்த இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மிலன்சிங் ஆசை வார்த்தைகள் கூறி அந்த பெண்ணை வெண்ணம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ள வாடகை வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு பாலியல் தொந்தரவு அளித்து துன்புறுத்தி உள்ளார். அதனை பொறுக்க முடியாமல் இளம்பெண் தகராறு செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கோபத்தில் மிலன்சிங் தனது நான்காவது மனைவி ஜீவிதா உடன் இணைந்து அந்த இளம் பெண்ணை அடித்து கொலை செய்து அவரது உடலை நெடுஞ்சாலை ஓரத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்தது. இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி மிலன் சிங் மற்றும் அவரது நான்காவது மனைவி ஜீவிதா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Devi Ramu

Recent Posts

பேரப்பிள்ளைகள் சொன்னாங்கன்னு ஓட்டுப் போடுறதா.? ஜனநாயகம் வேடிக்கையாகிடுச்சு… ஜனநாயகத்தை வெளுத்து வாங்கிய சீமான்..!!

பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…

8 மணத்தியாலங்கள் ago

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: நாளை கடையடைப்பு.. தமிழகத்தில் 5,000 கடைகள் இயங்கும்..!!

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: உணவகத்தில் ஏசி வெடித்து விபத்து… 1 லட்சம் நிதியுதவி அறிவித்தார் CM விஜய்..!!

தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…

9 மணத்தியாலங்கள் ago

“லேட்டா வந்தா அவ்ளோதான்”.. முதலமைச்சர் விஜய்யின் ‘பங்ச்சுவாலிட்டி’ உத்தரவால் பரபரப்பு.. தலைமைச் செயலகத்தில் அதிரடி மாற்றம்..!!

தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…

9 மணத்தியாலங்கள் ago

நீதி எங்கே போகிறது? சிறையில் இருந்து வந்த பாலியல் கைதிக்கு ஹீரோ ரேஞ்சுக்கு வரவேற்பு அளித்த ஆதரவாளர்கள்: வைரல் வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்..!

உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…

9 மணத்தியாலங்கள் ago

தினமும் பெட்ரோல் குடிக்கும் பெண்… “இது இல்லைனா எனக்கு தூக்கமே வராது” என அதிர வைக்கும் இளம்பெண்ணின் பகீர் போதை.!!

கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…

9 மணத்தியாலங்கள் ago