மும்பையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் மூலம் சுமார் ரூ.1.11 லட்சம் மதிப்பில் ஐபோன் ஆர்டர் செய்திருந்தார். ஆனால், அவருக்கு வந்த பார்சலில் போனுக்குப் பதிலாகத் தாடி வளர்க்கும் எண்ணெய் பாட்டில் மட்டுமே இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், நிறுவனத்திடம் முறையிட்டும் உரியப் பதில் கிடைக்காததால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், சேவை குறைபாட்டிற்காக பிளிப்கார்ட் மற்றும் அதன் விற்பனையாளருக்கு அபராதம் விதித்தது. அதன்படி, ஐபோனின் முழுத் தொகையையும் 9% வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் என்றும், மன உளைச்சலுக்கு ₹50,000 மற்றும் வழக்கின் செலவுகளுக்காக ₹20,000 என மொத்தம் சுமார் ₹2 லட்சத்தை 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
