“அம்மா பாசம் என்ன சும்மாவா…” தன் குட்டிக்காக வெள்ளத்தை எதிர்த்து நின்ற தாய்… சிலிர்க்கவைக்கும் பாசம் போராட்டம்… உதவ யாரும் இல்லை… தீயாய் பரவும் காட்சி…!

By Visaka on ஆடி 24, 2026

Spread the love

சீறிப் பாய்ந்த வெள்ளப் பெருக்கின் நடுவே, தன் சிறிய குட்டியைப் பாதுகாப்பதற்காகத் தாய் நாய் ஒன்று காரின் கூரை மீது ஏறி நின்றது. கீழே இறங்கினால் வீரியமிக்க நீர்வேகம் தன்னையும் தன் குட்டியையும் எங்கேனும் அடித்துச் சென்றுவிடும் என்பதை உணர்ந்த அந்தத் தாய், எவ்வித அஞ்சமுமின்றி தன் குட்டியைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டது. உதவி கேட்டு அது இடைவிடாது குரைத்துக் கொண்டிருந்த சத்தம், வெள்ளத்தின் சத்தத்தைக் காட்டிலும் மனிதர்களின் மனசாட்சியைத் தட்டுவதாய் அமைந்தது. ஒரு தாயின் எல்லையற்ற பாசத்தையும், ஆபத்தான சூழலிலும் தன் குட்டியைக் காக்கத் துடிக்கும் வீரத்தையும் அந்த நிமிடம் வெளிப்படுத்தியது.

https://twitter.com/Rudhrayadav001/status/2080609213160792321/photo/1

   

ஆனால், அங்கு நடந்த மிகப்பெரிய சோகம் என்னவென்றால், அந்தத் தாயின் கதறலைக் கண்டு அருகில் நின்ற மனிதர்கள் எவரும் உதவி செய்ய முன்வரவில்லை. ஆபத்தில் இருக்கும் ஒரு உயிரைக் காப்பாற்றுவதை விட, அதைத் தங்கள் கைபேசியில் படம்பிடித்து இணையத்தில் பரப்புவதே முக்கயமென நினைத்து வேடிக்கை பார்த்தனர். தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மனிதர்களின் இரக்க குணமும், சக உயிர்கள் மீதான கருணையும் எந்தளவிற்கு மழுங்கிப்போயுள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாகும். ஆபத்து நேரத்தில் கைபேசிக் கேமராக்களைத் திருப்புவதை விட, உதவிக் கரங்களை நீட்டுவதே உண்மையான மனிதநேயமாகும்.