பிள்ளைகளுக்காக சேர்ந்து வாழுங்க… ஜெயம் ரவி- ஆர்த்திக்கு நீதிமன்றம் போட்ட முக்கிய கண்டிஷன்..!

By Soundarya on கார்த்திகை 28, 2024

Spread the love

பொதுவாகவே சினிமா நட்சத்திரங்களின் விவாகரத்து செய்தி என்பது ஓரிரு நாட்களில் ரசிகர்களின் கண்ணீர் பதிவுடன் முடிந்து விடும். ஆனால் நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து செய்தி மட்டும் வெடித்துக் கொண்டே இருக்கிறது. திடீரென்று ஜெயம் ரவி விவாகரத்தை அறிவித்திருந்தார். ஆனால் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தி எந்த ஒரு பதிவும் போடாமல் இருந்தார். பிறகு இரண்டு நாட்களில் அவர் தரப்பிலிருந்து இதில் எனக்கு உடன்பாடு இல்லை என பதில் வந்தது.

#image_title

தற்போது இந்த பிரச்சனைக்கு பாடகி ஒருவர் காரணமாக கூறப்படுகின்றார். சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை வைத்திருந்த ஜெயம் ரவி கிசுகிசுவில் கூட இதுவரை சிக்காமல் இருந்து வந்தார். தற்போது ஒரு விவாகரத்தைச் செய்தியால் மொத்த பரபரப்புக்கும் காரணமாகியுள்ளார். என் கணவர் சுயநலத்திற்காக இப்படி செய்ததாகவும் என்னை பற்றி அவதூறு பேசாதீர்கள் என்றும் அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

   
   

 

இதற்கிடையில் ஜெயம் ரவி கோவா பாடகி ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டது. ஜெயம் ரவி தன்னுடைய காதல் மனைவியை பிரிகிறாரா? என்ற அதிர்ச்சி தகவல் வெளியிட்டதையடுத்து குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு அப்ளை செய்திருந்தார். ஆனால் ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழ தான் ஆர்த்தி ஆசைப்படுகிறார். இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி யின் பிரதர் படம் வெளியாகி தோல்வியை தழுவியது. அமரன் படத்தின் வெற்றிக்கு முன்னாடி பிரதர் படம் ஓடவில்லை என்று அவருடைய ரசிகர்கள் சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

#

இவர்களுடைய விவகாரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் இரு தரப்பும் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அதுவும் இன்றே நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து ரவி மற்றும் ஆர்த்தி தரப்பில் சமரச பேச்சு மையத்தில் பேசுவதன் மூலமாக இரண்டு மகன்களுக்காக மறுபடியும் சேர்ந்து வாழ வேண்டும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.