இது ஸ்கூல் ரைம்ஸ் மாதிரி இருக்கு!… பாலச்சந்தர் போட்டுக் காட்டிய ட்யூனை குறைத்து மதிப்பிட்ட விவேக்.. உலகப்புகழ் பெற்ற அந்த பாட்டு எது தெரியுமா?

By vinoth on கார்த்திகை 28, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவராக இருந்தவர் சின்ன கலைவாணர் விவேக் அவர்கள். 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் பல்வேறு வகையான நகைச்சுவைப் பாத்திரங்களை இவர் ஏற்று நடித்துள்ளார். தனது நகைச்சுவைகளில் சமூக சிந்தனைகளையும் கலந்து பேசக்கூடியவர். அதனால் சின்னக் கலைவாணர் என்ற பட்டத்தையும் பெற்றார்.

பல சிந்தனையான நகைச்சுவையால் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் தனக்கென தனி ஒரு இடத்தை இன்றளவும் வைத்திருப்பவர். சினிமா தாண்டியும் பல நற்காரியங்களை செய்தவர் விவேக். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் தீவிர ரசிகனான விவேக் அவரின் கொ ள்கைகளை பின்பற்றுவதோடு அதன் வழியில் நடந்தும் உள்ளார்.

   

கிரீன் கலாம் எனும் பெயரில் பல லட்சம் மரங்களை நட்டத்தோடு அதை பராமரித்தும் வந்துள்ளார். மேலும் திரையுலகில் நடிகராக மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையில் பல சமுதாய சீர்திருத்த பணிகளை செய்துள்ளார்.  இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இதய முடக்கம் காரணமாக காலமானார். அவரின் இந்த திடீர் மரணம் அவரது ரசிகர்களால் இன்றளவும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.

   

 

விவேக் ஒரு நடிகர் என்பதைத் தாண்டி பன்முகத்திறமை கொண்ட கலைஞர். அவர் பல முன்னணி ஆளுமைகளை நேர்காணல்கள் செய்துள்ளார். அதில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் முதல் ஆஸ்கர் நாயகன் ரஹ்மான் வரை அடக்கம். ஏ ஆர் ரஹ்மான் ஆஸ்கர் விருது பெற்றபின்னர் விவேக் எடுத்த நேர்காணல் மிகவும் பிரபலமானது.

அந்த நேர்காணலில் ஏ ஆர் ரஹ்மானின் முதல் படமான ரோஜா படத்தில் இடம்பெற்ற சின்ன சின்ன ஆசை பாடல் பற்றிய ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த நேர்காணலில் ஏ ஆர் ரஹ்மானிடம் “கே பாலச்சந்தர் சார் என்னிடம் ஒரு பாடலைப் போட்டுக்காட்டி எப்படி இருக்கு என்றார். நான் ரொம்ப எளிமையா ஸ்கூல் ரைம்ஸ் மாதிரி இருக்கு என்றேன். எளிமையா இருக்குல்ல அப்ப கண்டிப்பா ஹிட்டாகும் என்றார். அந்த பாட்டுதான் ரோஜா படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் என பகிர்ந்துள்ளார்.