“சாதி, மதம் எனக்கு கிடையாது” ஒரே வாரத்தில் சான்றிதழ் கொடுத்தாகணும்… நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!

By Soundarya on சித்திரை 20, 2026

Spread the love

சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் தனது சாதி குறித்து தவறுதலாகப் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு வருத்தம் தெரிவித்த பார்த்திபன், தான் எந்த சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்டவர் என்பதை நிரூபிக்க ‘சாதி, மதம் அற்றவர்’ என்ற சான்றிதழ் கேட்டு சென்னை சோழிங்கநல்லூர் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்தார். ஆனால், அந்த விண்ணப்பத்தின் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால், அவர் உயர் நீதிமன்றத்தை நாடினார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து, ஒரு வார காலத்திற்குள் அவருக்கு ‘சாதி, மதம் அற்றவர்’ என்ற சான்றிதழை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 2025-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஒரு முக்கியத் தீர்ப்பில், தனிமனித விருப்பத்தின் அடிப்படையில் இத்தகைய சான்றிதழ்களை அரசு வழங்கலாம் எனக் கூறப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தனது அடையாளத்திலிருந்து சாதி மற்றும் மதப் பெயர்களை நீக்க வேண்டும் என்ற பார்த்திபனின் நீண்ட நாள் முயற்சி வெற்றி பெற்றுள்ளது.