அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், உலக நாடுகளை உற்றுநோக்க வைக்கும் சில முக்கிய நகர்வுகள் அரங்கேறி வருகின்றன.பாகிஸ்தான் ராணுவ தளபதி ஃபீல்டு மார்ஷல் ஆசிம் முனீர், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையில் மிக முக்கியப் பங்காற்றி வருகிறார். சமீபத்தில் அவர் டெஹ்ரான் சென்று ஈரானிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆசிம் முனீரை தனது “விருப்பத்திற்குரிய ஃபீல்டு மார்ஷல்” (Favorite Field Marshal) என்று பாராட்டியதோடு, அவர் மேற்கொண்டு வரும் அமைதி முயற்சிகளுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டினாலும், அமெரிக்கப் பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இதற்கு ஒரு ‘சிவப்பு எச்சரிக்கை’ (Red Flag) விடுத்துள்ளனர். ஆசிம் முனீருக்கும் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படைக்கும் (IRGC) இடையே உள்ள நெருங்கிய தொடர்பு, அமெரிக்காவின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அவர்கள் அஞ்சுகின்றனர். பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) அருகே ஈரான் கொடி ஏந்திய சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கக் கடற்படை அதிரடியாகக் கைப்பற்றியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர்ப் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
