காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு… தூக்கமாத்திரை கலந்து கொடுத்து காதலனோடு ரகசிய சந்திப்பு… 112 க்கு வந்த அழைப்பு… வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்..!!

By Soundarya on புரட்டாதி 24, 2025

Spread the love

உத்திரபிரதேச மாநிலம் வரதாபாத்தை சேர்ந்த ஸ்வாதி. இவர் மனோஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களுடைய காதல் விவகாரத்தை அறிந்த ஸ்வாதியின் தந்தை  மற்றும் சகோதரர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள். இருந்தாலும் சுவாதி காதலை கைவிடவில்லை. தன்னுடைய குடும்பத்தினரின் உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து மனோஜை ரகசியமாக சந்தித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலுக்கு குடும்பத்தினர் இடையூறாக இருப்பதால் குடும்பத்தினரை பொய்யான வாழ்க்கில் சிக்க வைக்க ஒரு கொலை சம்பவத்தை நடத்த இருவரும் முடிவு செய்துள்ளார்கள். அதன்படி செப்டம்பர் 17ஆம் தேதி யோகேஷ் என்ற ஓவியர் கல்லறைக்கு அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, மதுவில் அதில் தூக்க மாத்திரை கலந்து யோகேஷ்க்கு கொடுத்துவிட்டு பிறகு செங்கற்களால் தாக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது.  அவருடைய தொலைபேசியை சோதனை செய்தபோது அதில் சுவாதியின் தந்தை மற்றும் சகோதரர்கள் தன்னை தாக்கியதாக யோகேஷ் புகார் கூறியதாக கண்டுபிடிக்கப்பட்டது .ஆனால் அழைப்பிலிருந்து குரல் பாதிக்கப்பட்டவரின் குரலுடன் பொருந்தாததால் போலீசார் சந்தேகமடைந்துள்ளார்கள்.

   

பின்னர் இது குறித்து விசாரணை இன்னும் தீவிர படுத்தியுள்ளார்கள். இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்வாதியும் மனோஜும் சேர்ந்து தன்னுடைய குடும்பத்தினரை பொய் வழக்கில் சிக் வைப்பதற்கு கொலை செய்துவிட்டு தப்பிப்பது எப்படி? என்பது போன்ற ஆவண படங்களை பார்த்துள்ளார்கள். அதை வைத்து ஓவியர் யோகேஷை தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார்கள். அதை குடித்து அவர் மயக்கம் அடைந்துள்ளார். அப்போது இருவரும் செங்கல்லால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார்கள் . பிறகு 112 என்ற எண்ணை அழைத்து சுவாதி குடும்பத்தினர் தன்னை தாக்கியதாக யோகேஷ் கூறுவது போல் கூறியுள்ளன.ர் இதனை யோகேஷின் மரண வாக்கு மூலமாக போலீசார் எடுத்துக் கொள்வார்கள் என்று நம்பி அந்த செங்கலை சம்பவ இடத்திலேயே விட்டு சென்றுள்ளார்கள். இதனை எடுத்து ஸ்வாதி மற்றும் மனோஜ்   மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்கள்.