காலில் கருப்பு கயிறு அணியலாமா…? பேஷனாக நினைத்து இதை மட்டும் செஞ்சுடாதீங்க…

Spread the love

இன்றைய காலகட்டத்தில் பல இளைஞர்கள் இளம்பெண்கள் காலில் கருப்பு கயிறு கட்டி இருப்பதை பார்த்திருப்போம். அதை பேஷனாக அழகுக்கு கட்டியிருப்பவர்களும் உண்டு. ஆனால் அதை அப்படி செய்யக்கூடாது. காலில் கயிறு அணிவதற்கு பின்னால் சில சாஸ்திர முறைகளும் இருக்கின்றன. அது என்ன என்பதை விரிவாக காண்போம்.

கருப்பு நிறத்திற்கு தீய சக்திகளை விரட்டும் தன்மை உள்ளது. கருப்பு பொட்டு வைப்பது, கருப்பு கயிறு கட்டினால் காத்து கருப்பு அண்டாது என்று நம் வீட்டு பெரியோர்கள் சொல்ல கேட்டிருப்போம். இன்றைக்கு பேஷனாக கருப்பு கயிறு காலில் கட்டி இருந்தாலும் நம் முன்னோர்கள் அதை ஏற்கனவே செய்து வந்த பழக்கம் தான். கழுத்திலோ, கைகளிலோ, இடுப்பிலோ கருப்பு கயிறை வைத்து கட்டி விடுவார்கள். குழந்தைகள் பிறந்து சில நாட்களிலேயே குழந்தைக்கும் தாய்க்கும் கண் திருஷ்டி படாமல் இருக்க கருப்பு கயிறு கட்டுவார்கள். கருப்பசாமி, முனியசாமி போன்ற கோயில்களிலும் பூசாரி கயிறு கட்டி விடுவதை நாம் பார்த்திருப்போம்.

இதற்கு காரணம் சனிபகவான் முதலில் ஒருவரின் கால்களை தான் பற்றுவார் என்று சாஸ்திரம் கூறுகிறது. எனவே காலில் கருப்பு கயிறு கட்டுவதன் மூலம் சனி தோஷம் நீங்கும். அத்துடன் ராகு கேது பாதிப்புகள் ஏற்படாது என்பது நம்பிக்கை. அஷ்டமச்சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி போன்ற காலங்களில் கருப்பு கயிறு கட்டிக் கொள்வதன் மூலம் சனி பகவானால் ஏற்படும் சங்கடங்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

முதலில் கருப்பு கயிறு கட்டுவதற்கு முன் அதை சிவாலயங்களுக்கு எடுத்துச் சென்று சனிபகவான் சன்னதியில் சாமியின் பாதத்தில் வைத்து வணங்கி விட்டு எடுத்து வர வேண்டும் அல்லது வீட்டில் விளக்கு ஏற்றி அதன் முன் கருப்பு கயிறை வைத்து மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த கருப்பு கயிற்றை எடுத்து நவகிரகங்களை நினைத்துக் கொண்டு 9 முடிச்சுகளை போட வேண்டும் பின்னர் காலில் கட்டிக் கொள்ளலாம். அந்த கருப்பு கயிற்றை காலில் கட்டிய பின்பு சனி பகவான் மந்திரத்தை 21 முறை உச்சரிக்க வேண்டும். இந்த கருப்பு கயிற்றை பெண்கள் இடது காலிலும் ஆண்கள் வலது காலிலும் கட்டிக் கொண்டால் நன்மை உண்டாகும்.

#image_title

admin

Recent Posts

என்னடா இது..? 5.3 லிட்டர் டேங்கில் 6 லிட்டர் பெட்ரோலா..? பெட்ரோல் பங்கில் அம்பலமான பகீர் மோசடி… ஊழியரை ஓட ஓட விட்ட இளம்பெண்..!!

பெட்ரோல் பங்குகளில் நடக்கும் மோசடிகளை ஒரு இளம்பெண் தனது சமயோசித புத்தியால் அம்பலப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப்…

5 minutes ago

“காப்பாற்ற வேண்டிய போலீஸே இப்படியா?” – பெசன்ட் நகர் கடற்கரையில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… அதிர்ந்துபோன சென்னை…!

சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவிக்கு, பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலராலேயே…

11 minutes ago

“பேச்சுவார்த்தை தோல்வி.. இனி ஆட்டம் வேற மாதிரி”… இஸ்ரேலில் 6500 டன் ஆயுதங்களை குவித்த அமெரிக்கா.. நடுங்கும் ஈரான்…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஈரானிய கடற்படையை…

19 minutes ago

பகீர் ரெய்டு..! மதுக்கடையைப் புகுந்து துவம்சம் செய்த கிராமத்து தாய்மார்கள்… குடிகார கணவன்மார்களால் வந்த வினை.. அதிரும் உபி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் இட்டாவா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், மதுக்கடையால் தங்கள் குடும்பங்கள் சீரழிவதைக் கண்டு கொதித்தெழுந்த பெண்கள்,…

25 minutes ago

படுக்கைக்கு அழைத்த ‘பெண் அதிகாரி’… மறுத்த இந்திய ஊழியருக்கு நேர்ந்த கதி? உலகையே அதிரவைத்த ஜேபி மோர்கன் வழக்கு…. ஷாக் பின்னணி…!

அமெரிக்காவின் முன்னணி நிதி நிறுவனமான ஜேபி மோர்கன் (JPMorgan) வங்கியின் லிவரேஜ்டு ஃபைனான்ஸ் பிரிவின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிய லோர்னா…

27 minutes ago

மேடையிலிருந்து குதித்த மணப்பெண்.. மாலை மாற்றும் நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. கௌரவம் பார்க்கப்போய் நடுத்தெருவுக்கு வந்த தந்தை..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியில், திருமண மேடையிலேயே மணப்பெண் செய்த அதிரடி காரியம் ஒட்டுமொத்த ஊரையும் அதிர வைத்துள்ளது.…

30 minutes ago