#image_title
90களில் இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் பிரசாந்த். அந்த காலகட்டத்தில் விஜய், அஜித்தை விட பிரசாந்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. டாப் ஸ்டார் என அழைக்கப்பட்ட பிரசாந்த் ஜீன்ஸ், வின்னர் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் சறுக்கல்களை சந்தித்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரசாந்த் ஹீரோவாக கம்பேக் கொடுத்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு ஹிந்தியில் அந்தாதூன் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி மெகா ஹிட் ஆனது. அந்த படத்தை அந்தகன் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். இதில் பிரசாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டது. ஆனால் ஒரு சில காரணங்கள் காரணமாக படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளி போனது.
அந்தகன் படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் சிம்ரன், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, வனிதா, கே.ஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அந்தகன் படத்தின் போஸ்டரும் ட்ரைலரும் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஒன்பதாம் தேதி அந்தகன் திரைப்படம் ரிலீஸ் ஆனது.
நடிகர் பிரசாந்த் உட்பட குழுவினர் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தனர். அந்தகன் படத்தை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் பட்டாசு வெடித்து, பேனருக்கு பால் அபிஷேகம் செய்தனர். முதல் நாள் அந்தகன் திரைப்படம் 65 லட்சம் ரூபாய் வசூல் செய்தது. இரண்டாவது நாள் 1.15 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. பாசிட்டிவ் விமர்சனங்கள் மற்றும் விடுமுறை காரணமாக இனிவரும் நாட்களில் அந்தகன் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#image_title
திருப்பூரில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், உணவக நிறுத்தத்தில் ஏற்பட்ட தகராறில் பயணியை ஓட்டுநரும் நடத்துநரும் தாக்கிய…
ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்த நெருக்கடியை இந்தியா…
தென்னிந்திய திரையுலகின் எவர்கிரீன் நாயகி த்ரிஷா, தற்போதும் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்களுடன் மிகுந்த நெருக்கத்துடன்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு மாநிலம் முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச்…
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தாக்கம் அரசியல் களத்தில் பெரும்…
2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அரசியல் களம் மிகுந்த எதிர்பார்ப்புடன்…