கூட்டுறவுச் சங்க அலுவலகங்கள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் முதலமைச்சர் புகைப்படங்கள் சந்தை மதிப்பை விட மிகக் கூடுதலான விலைக்கு (ரூ. 800) வாங்கப்பட்டதில் பெரும் நிதி முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, தமிழ்நாடு பொது விநியோகத் திட்ட ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பால்ராஜ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். திண்டுக்கல் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராகவ் பாலாஜி மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக, கூட்டுறவுத் துறைச் செயலர் அல்லது தலைமைப் பதிவாளர் அளவில் உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அம்மனுவில் கோரப்பட்டிருந்தது.
குறிப்பாக, உயரதிகாரியான மண்டல இணைப்பதிவாளர் மீதான புகாரை அவருக்குக் கீழ் பணியாற்றும் அலுவலரைக் கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட்டது முறையான விசாரணையாக அமையாது என்ற வலுவான வாதத்தை மனுதாரர் தரப்பு முன்வைத்தது. மேலும், பொது விநியோகத் திட்டப் பணியாளர்களை அச்சுறுத்தி மாதந்தோறும் கமிஷன் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளிலும் அந்த அதிகாரி ஈடுபட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, புகைப்படங்கள் வாங்கியதற்கான உண்மையான செலவினங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து விரிவாக ஆராய உத்தரவிட்டுள்ளது. மேலும், கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் அந்தந்தப் பகுதிகளில் தகுதியான அதிகாரிகளை நியமித்து, புகார்கள் குறித்துக் காலக்கெடுவுக்குள் வெளிப்படையான விசாரணை நடத்தி உரிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…