திமுக செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட 70 வயது வரம்பு முடிவைத் தொடர்ந்து, கட்சிக்குள் மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கான போட்டி தீவிரமடைந்துள்ளது. 70 வயதைக் கடந்த 13 மூத்த மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படவுள்ள நிலையில், அந்த காலிப் பணியிடங்களைக் கைப்பற்ற கனிமொழி மற்றும் உதயநிதி தரப்பினர் திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. கனிமொழி தனது ஆதரவாளர்களுக்கு 30 சதவீத மாவட்டச் செயலாளர் பொறுப்புகளை ஒதுக்குமாறு கோருவதாகவும், அதேவேளையில் இளைஞரணியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என உதயநிதி தரப்பு வலியுறுத்துவதாகவும் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களும் தங்கள் சொந்த மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க ஆதரவாளர்களுக்குப் பதவி வழங்கிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கடி அளித்து வருகின்றனர். காலியாகும் 13 மாவட்டச் செயலாளர் இடங்களைப் பிடிப்பதில் முன்னணித் தலைவர்களிடையே கடும் போட்டி நிலவுவதால், கட்சிப் பொறுப்புகளைப் பிரித்துக் கொடுப்பதில் திமுக தலைமைக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதா அல்லது சீனியர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதா என்ற தர்மசங்கடமான சூழலில், மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு திமுகவின் உள்கட்சி அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குவஹாத்தி நரேங்கிப் பகுதியிலுள்ள சாந்தி நகரில், கடுமையான மதுபோதையில் இருந்த கோலக் ரபா மற்றும் பிரஞ்சித் கலிதா ஆகிய இரண்டு…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோயிலின் 9 கோபுரங்களைச் சுத்தம் செய்யும் பணி கடந்த நவம்பர்…
கடந்த 2004-ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட நாசாவின் புகழ்பெற்ற 'ஸ்விப்ட் அப்சர்வேட்டர்' (Swift Observatory) செயற்கைக்கோள், தனது 22 ஆண்டுகால…
டெல்லியில் பிரபல டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான இளம்பெண் ஒருவரால் இளைஞர் ஒருவர் மிரட்டப்பட்டு பெருந்தொகை பறிக்கப்பட்ட மோசடிச் சம்பவம்…
புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாட்களில் அதிகாலை 6 மணி முதல் நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதி அளித்துள்ள…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7…