இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய கூலித் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை மற்றும் நடிகர்களான அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜீனா ,சவுபின் ஷாகிர் ,ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா, ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வெளியாகி நான்கு நாட்களில் ரூ.194.25 வசூலளித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.50 கோடியும்வசூலித்துள்ளது. இதுவரை ரூபாய் 400 கோடி உலக அளவில் வசூலளித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
