பிக்பாஸ் பிரபலம் ரச்சிதா வீட்டில் விசேஷம்… கையில் மருதாணியோடு வெளியிட்ட போட்டோஸ்… என்னவா இருக்கும்..? குழப்பத்தில் ரசிகர்கள்..!

By Meena on ஆவணி 18, 2025

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் அறிமுகமானவர்தான் ரச்சிதா மகாலட்சுமி. இவர் இந்த சீரியல் மூலம் பிரபலமாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். அதனையடுத்து பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தார். இதனையடுத்து சில படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் பயர் என்ற படத்தில் நடித்திருந்தார் .

இதற்கிடையில் சில வருடங்களுக்கு முன் இவருக்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு தன் கணவனை பிரிந்து விட்டார். இவர் தற்போது புது வீடு வாங்கி அவரது அம்மாவுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தனது வீட்டில் விசேஷம் எனக் குறிப்பிட்ட நிலையில் தன் கைகளில் மருதாணி வைத்துக்கொண்ட புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்துள்ள இவர் என்ன விசேஷம் என்று தெரிவிக்கவில்லை.