ஓபிஎஸ் NDA கூட்டணியிலிருந்து சில வாரங்களுக்கு முன்பாக விளக்கினார். இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வதை NDA கூட்டணிக்கு பாஜகவினர் அழைக்க வேண்டுமெனவும், அமமுகவுடன் சேர்ந்து அவர் தேர்தலைச் சந்திப்பார் என்றும் டிடிவி தினகரன் கூறியிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், ” கூட்டணி குறித்து பேச தன்னை யாரும் தொடர்புகொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.
அதேநேரம், NDA துணை ஜனாதிபதி வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக அவர் தவெகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
