தமிழகத்தின் துணை முதல்வரும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த 27ஆம் தேதி பிறந்த நாளை கொண்டாடினார் .இவருடைய பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள். அந்த வகையில் நடிகர் ரித்திகா உதயநிதி ஸ்டாலின் உடன் எடுத்து செல்பி புகைப்படத்தை பதிவிட்டு ஹாப்பி பர்த்டே என்று வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த போட்டோவை ஏராளமானவர்கள் பலவிதமான கமெண்ட் செய்து ட்ரெண்டாக்கினார்கள். இதை பார்த்த நடிகர் ரித்திகா ஷாக் ஆகியுள்ளார் .இதனை எடுத்து அந்த புகைப்படத்தின் பின்னணி என்ன என்பது குறித்து விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் சரவணன் இருக்க பயமேன் படத்தின் சூட்டிங் போது எடுத்தது. அதனால் அதை பதிவிட்டு உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னேன். அதேபோல கோட் படத்திலும் ஒரு சின்ன ரோல் வாய்ப்பு கிடைத்தது. அது ரொம்ப சிறிய ரோல் என்பதால் நிராகரித்துவிட்டேன். ஆனால் அதில் நான் நடித்து விஜய் சாரோட ஒரு செல்பி எடுத்திருக்கலாம் என்று இப்போது நினைக்கிறேன். ஒன்னு தெரிஞ்சுக்கோங்க இவங்க எல்லாம் என்னுடைய சக நடிகர்கள். அவர்களோடு நான் போட்டோ எடுத்திருந்தால் நிச்சயம் அவர்களின் பிறந்தநாளுக்கு அதை பதிவிட்டு வாழ்த்து தெரிவிப்பேன்.
உதயநிதி ஸ்டாலினுடன் நான் போட்ட போட்டோவுக்கு அவ்வளவு கமெண்ட் போட்டீர்கள். நிறைய பேர் அரசியல் பார்வையோடும் பதிவிட்டுள்ளீர்கள். ஆனால் இதை என்னுடைய கமெண்ட் பாக்ஸில் காட்டி எந்தவித பயனும் இல்லை. இதையெல்லாம் உங்களுடைய ஓட்டில் காட்டுங்கள். யார் உங்களுக்கு பிடிக்குமோ அவர்களுக்கு ஓட்டு போடுங்கள். அதை விட்டுவிட்டு என்னுடைய போட்டோவிற்கு கமெண்ட் செய்வதால் எந்த பயனும் இல்லை என்று கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…