“இது காவல் நிலையமா…? இல்ல தவெக அலுவலகமா…?” – பெயர்ப்பலகையை மறைத்த பேனரால்… கோவையில் வெடித்த பெரும் சர்ச்சை…!!

Spread the love

கோயம்புத்தூர் மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் உள்ள வடவள்ளி பேருந்து நிலைய காவல் நிலைய வளாகத்தில், அதன் பெயர் பலகையை மறைக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பேனரில் அமைச்சர் சம்பத் குமார் மற்றும் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன. காவல் நிலையப் பெயரையே மறைக்கும் வகையில் வைக்கப்பட்ட இந்த பேனரின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, “இது காவல் நிலையமா அல்லது தவெக அலுவலகமா?” என்ற கேள்விகளுடன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பூதாகரமானதைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். பின்னர், விதிகளுக்குப் புறம்பாகவும் பொதுமக்களுக்கு இடையூறாகவும் வைக்கப்பட்டிருந்த அந்த தவெக பேனரை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பொதுமக்கள் காவல் நிலையம் முன்பு வீடியோ எடுத்தாலே நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, அரசியல் கட்சியினர் பெயர் பலகையை மறைத்ததற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பொது இடங்களில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் பேனர்கள் வைக்கக் கூடாது என்று தவெக தலைமை மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் ஏற்கனவே தொண்டர்களுக்குக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். இருப்பினும், தலைமையின் உத்தரவையும் மீறி கீழ்மட்ட நிர்வாகிகள் காவல் நிலைய வளாகத்திலேயே பேனர் வைத்தது தவெக ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய விதிமீறல் செயல்கள் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்பதால், எதிர்காலத்தில் இதனைத் தவிர்க்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Swetha

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

6 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

6 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

6 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

6 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

6 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

6 மணத்தியாலங்கள் ago