பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான 55 வயதான பாசித் அலி, திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் புகைப்படத்தை விளையாட்டுப் பத்திரிகையாளர் ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அவர் விரைவில் குணமடையப் பிரார்த்திக்குமாறு கோரியிருந்தார். ஆனால், அந்தப் புகைப்படத்தில் இருந்த ஒரு விசித்திரமான விஷயம் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகியுள்ளது.
அந்தப் புகைப்படத்தில் பாசித் அலி கண்களை மூடிக்கொண்டு படுக்கையில் இருப்பது போல் இருந்தாலும், அவரது கையில் இருக்கும் செல்போன் திரையின் வெளிச்சம் எறிந்து கொண்டுள்ளது. அவர் கை விரல்கள் ஃபோனை ஸ்க்ரோல் செய்வது போல அமைந்திருந்ததால், புகைப்படத்திற்காகவே அவர் கண்களை மூடி நடித்தாரா அல்லது போட்டோ எடுப்பதற்கு முன் போனை வைக்க மறந்துவிட்டாரா என நெட்டிசன்கள் இணையத்தில் கிண்டல் செய்து வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும்போதும் இத்தகைய புகைப்படம் வெளியான சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
