இப்படி ஏமாத்திட்டிங்களே ஐயா?… “ஒன்றரை வருஷ உழைப்பு காலி…. அப்பா – மகன் தகராறில் என் வாழ்க்கையே போச்சு”… மேடையில் உடைந்து அழுத இயக்குனர் சேரன்….!

By Nanthini on ஆவணி 18, 2026

Spread the love

பாமகவின் தலைவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான உள்கட்சி மோதலால், தங்கள் படக்குழுவின் ஒன்றரை ஆண்டு கால உழைப்பு முற்றிலும் வீணாகிப்போனதாக பிரபல திரைப்பட இயக்குனர் சேரன் தீவிர வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘ஒன் மேன்’ திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகவிருந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது குறித்து அண்மையில் ஊடகங்களிடம் உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார்.

தொடக்கத்தில் இந்த வரலாற்றுப் படத்தை இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் இயக்கவே திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், தயாரிப்பாளர்களின் வற்புறுத்தலால் அத்திட்டம் சேரனின் கரங்களுக்கு மாறியது. மற்றொரு படைப்பாளியின் உழைப்பையும் கனவையும் தட்டிப் பறிப்பதாக அமைந்துவிடக் கூடாது என்பதில் சேரன் உறுதியாக இருந்தார். ராஜ்குமாருக்கே அந்த வாய்ப்பை வழங்கி, தான் உறுதுணையாக இருப்பதாக ராமதாஸிடமே நேரில் வலியுறுத்தியபோதிலும், சூழ்நிலைகளின் தீவிரத்தால் சேரன் அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.

   

1970-களின் பின்னணியில் உருவாகவிருந்த இப்படத்திற்காக 15 பேர் கொண்ட படக்குழுவினர் தமிழ்நாடு முழுவதும் தீவிரமாகப் பயணித்தனர். அக்காலகட்டத்திற்குப் பொருத்தமான கிராமங்கள், வரலாற்றுத் தரவுகள் மற்றும் மக்களின் பிரத்யேகத் தோற்றங்களை அடையாளம் காண காடு, மேடுகளை அலைந்து திரிந்து ஒன்றரை ஆண்டுகளைச் செலவிட்டனர். ஆனால், அனைத்துப் பூர்வாங்கப் பணிகளும் முடிவடைந்து படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், ராமதாஸ் – அன்புமணி இடையே ஏற்பட்ட அரசியல் மற்றும் குடும்ப மோதல்கள் காரணமாக இத்திட்டம் முழுமையாக முடங்கியது.

   

பணிபுரிந்த நாட்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டிருந்தாலும், ஒரு படைப்பாளியாகத் தனது கற்பனையும் உழைப்பும் திரையில் வெளிவராமல் போனது தீராத வலியளிப்பதாகச் சேரன் குறிப்பிட்டார். “இப்போது தந்தையும் மகனும் மீண்டும் இணைந்துவிட்டார்கள்; ஆனால், எங்களது உழைப்பில் உருவாகவிருந்த திரைப்படம் மட்டும் யாருக்குமே இல்லாமல் போய்விட்டது” என மிகுந்த ஏமாற்றத்துடன் தனது உரையை அவர் நிறைவு செய்தார்.