திமுக-விற்கு செக் வைத்த காங்கிரஸ் சீனியர்கள்… ப.சிதம்பரம் முதல் மாணிக்கம் தாகூர் வரை… காங்கிரஸில் வெடித்தது கலகம்… தமிழக அரசியலில் பரபரப்பு….!

By Nanthini on தை 20, 2026

Spread the love

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டத்தில், அக்கட்சியின் முக்கிய மூத்த நிர்வாகிகள் பலரும் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 91 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 30 நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. குறிப்பாக, தமிழக ஆட்சியில் காங்கிரஸுக்கும் பங்கு வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரும் எம்.பி. மாணிக்கம் தாகூர், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கே.எஸ். அழகிரி, கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி மற்றும் விஜய் வசந்த் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இக்கூட்டத்தைப் புறக்கணித்தது கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசலை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.

திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்தும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வியூகங்கள் குறித்தும் கட்சிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரி காங்கிரஸ் தரப்பில் ஒரு பிரிவினர் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை விரைவில் இறுதி முடிவை அறிவிக்கும் என அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். நிர்வாகிகளிடம் பெறப்பட்ட தனிப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டாலும், முக்கிய தலைவர்களின் இந்தத் தொடர் புறக்கணிப்பு காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் அதிருப்தியையும் சலசலப்பையும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.