இனி வாய் திறந்த அவ்வளவுதான்… காங்கிரஸ் கட்சியினருக்கு செல்வப்பெருந்தகை போட்ட திடீர் உத்தரவு… இதுதான் விஷயமா…?

Spread the love

கரூரில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் விரிவான விசாரணை நடத்த குரு நபர் ஆணையத்தை தமிழக அரசு அமைந்துள்ளது. இந்த விசாரணை ஆணையம் ஒருதலை பட்சமாக நடப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டை வருகின்றன.

இதனிடையே திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரும் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தை விமர்சித்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சியை சேர்ந்த ஒருவரே திமுக அரசு அமைத்த விசாரணை ஆணையத்தை தவறு என்று விமர்சித்தது திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியினருக்கு செல்வ பெருந்தகை அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று திமுகவினர் கூறியிருந்தனர்.

இந்நிலையில் கரூர் விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியினர் யாரும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை சொல்லக்கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை உத்தரவிட்டுள்ளார். கரூர் துயர சம்பவத்தில் இந்திய காங்கிரஸ் தலைமை எந்த விதத்திலும் அரசியலாக கூடாது என்ற நோக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் துணை நின்று மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும் என முடிவெடுத்துள்ளது.

இந்த இக்கட்டான சூழலில் தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வரும் தாங்கள் தொலைக்காட்சியில் கட்சியில் முடிவுகளுக்கு எதிராகவும் தமிழக அரசு சார்பாக கரூர் கூட்ட நெரிசல் குறித்தும் விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆணையம் குறித்து விமர்சித்ததும் பேட்டி அளித்துள்ளீர்கள். தங்களின் இந்த செயல் கட்சியின் முடிவுகளுக்கு எதிராக உள்ளதால் இந்த கடிதம் கிடைக்கப்பெற்ற பதினைந்து நாட்களுக்குள் தங்களின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு உரிய விளக்கத்தை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என செல்வ பெருந்தகை கூறியுள்ளார்.

Nanthini

Recent Posts

அட கடவுளே… 8 மாசமா சம்பளம் இல்ல… அப்புறம் பிச்சை எடுக்காம என்ன பண்றது?… கையில் பிச்சை பாத்திரத்துடன்… வீதியில் இறங்கிய அரசு பெண் அதிகாரி… இணையத்தில் வைரல்…!!

பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…

3 minutes ago

“வீட்டில் மகளுடன் இருந்த தொழிலாளி…” தனியாக அழைத்து சென்று முதலாளி செய்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…

6 minutes ago

ஐயோ கொடுமையே… காதல் திருமணம் சோகத்தில் முடிந்த விபரீதம்… மனைவியை அடித்துக் கொன்று தப்பிய கணவனின் கொடூரம்… உ . பி – யில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…

6 minutes ago

ஏங்க எழுந்திரிங்க… நாம வீட்டுக்குப் போயிடலாம்… விபத்தில் இறந்த கணவனின் உடலைப் பிடித்து கதறிய மனைவி… திருவாரூரில் நடந்த சோகம்…!

திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…

20 minutes ago

அட கொடுமையே… பட்டாசு வெடித்தால் நிரந்தர பார்வை இழப்பு?… மருத்துவர்கள் விடுக்கும் அதிரடி எச்சரிக்கை… மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…

38 minutes ago