BREAKING: மொத்தமாக மாறினர்.. விஜய்க்கு இழப்பு…. செம ஷாக்கில் தவெக தொண்டர்கள்..!

By Nanthini on பங்குனி 2, 2026

Spread the love

தமிழக அரசியலில் தொகுதிப் பங்கீடு தொடர்பான விவாதங்கள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படலாம் என்ற தகவல் வெளியான நிலையில், அதனை ஏற்க முடியாது என காங்கிரஸ் மேலிடம் வெளிப்படையாகவே அதிருப்தியைப் பதிவு செய்தது. இந்தச் சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களிடம் ரகசியமாகக் கருத்து கேட்கப்பட்டது. முன்னதாக, காங்கிரஸ் தரப்பில் உள்ள சில முக்கியப் புள்ளிகள் தவெக-விற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்ததால், இது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இருப்பினும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் திமுகவுடனான கூட்டணியைத் தொடரவே விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக ஒரு புதிய கட்சி என்பதால், அதன் தேர்தல் பலம் மற்றும் வாக்கு வங்கி குறித்து முழுமையாக அறியாமல் கூட்டணி வைப்பது ஆபத்தானது என்றும், திமுக போன்ற பலமான கூட்டணியில் இருப்பதே கட்சியின் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் இந்த திடீர் மனமாற்றம், தவெக தரப்புக்குச் சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.