13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை… 41 வயது நபருக்கு நீதிமன்றம் கொடுத்த “ஆயுள் கால” அதிர்ச்சித் தீர்ப்பு…. கேரளாவில் நடந்த பகீர் சம்பவம்…!

By Nanthini on பங்குனி 2, 2026

Spread the love

கேரளாவில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு நீதிமன்றம் 53 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கோழிக்கோடு மாவட்டம் நொச்சாடு பகுதியைச் சேர்ந்த முகமது ரைகான் (41) என்ற தொழிலாளி, கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விபத்தில் காயமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்துள்ளார். அந்தச் சமயத்தில், அருகில் இருந்த ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அவர், அங்கு தனியாக இருந்த 13 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பேராம்பிரா போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நாதாபுரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தேவன் கே. மேனன், முகமது ரைகான் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 53 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2.10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மொத்தம் 13 சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த மிக கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இத்தகைய கடுமையான தீர்ப்புகள் ஒரு எச்சரிக்கையாக அமையும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.