கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான சென்னை 28 திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர்தான் வெங்கட் பிரபு. தொடர்ந்து சரோஜா மற்றும் கோவா என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவர் 2011 ஆம் ஆண்டு அஜித்தை வைத்து இயக்கிய திரைப்படம் தான் மங்காத்தா. அஜித்தின் வாழ்க்கையில் பெரிய வெற்றி படங்களில் மங்காத்தா திரைப்படமும் ஒன்றாக உள்ளது. இந்த திரைப்படத்தில் அஜித் உடன் இணைந்து அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் திரிஷா, அஞ்சலி மற்றும் ஆண்ட்ரியா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருந்தா இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வாலி எழுதிய “வாடா பின் லேடா”என்ற பாடலும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் பாடல் பதிவின்போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது இந்த பாடலின் கடைசி வரிகள் ஆண் பாடுவது போன்று வேண்டும், அஜித் சார் பாடி முடிப்பது போல் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று யுவன் சங்கர் ராஜா சொல்ல இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் யுவன் இருவரும் க்ரிஷிடம் சொல்லி கவிஞர் வாலிக்கு போன் செய்யுமாறு கூறியுள்ளனர்.
வாலி எட்டு மணிக்கு போன் செய்தாலே கோபப்படும் சுவாபம் கொண்டவர். ஆனால் இவர் 9 மணிக்கு போன் செய்த நிலையில் போனை எடுத்த பாலி என்னைய இந்த நேரத்துல போன் பண்ணி இருக்க என்று கேட்க பாடல் பரிகளை மாற்ற வேண்டும் என்று கிரிஷ் கூறியுள்ளார். நான் மருத்துவமனையில் இருக்கேன் என்று வாலி கூற அப்போ எதுக்கு போன் எடுத்தீங்க என்று கிரிஷ் கேட்க கையில் இருந்தது எடுத்தேன் என்று வாலி கூறியுள்ளார்.
ஒன்னு பண்ணு பாடலை கங்கை அமரனிடம் கொடு அதற்கு ஏற்றபடி கடைசி வரியை அவன் மாற்றி கொடுப்பான் என்று வாலி கூறியுள்ளார். அதன் பிறகு வெங்கட் பிரபு தன்னுடைய அப்பா கங்கை அமரனுக்கு போன் செய்து சொல்ல கடைசி இரண்டு வரிகளை கங்கை அமரன் மாற்றி கொடுத்துள்ளார். அப்படி உருவான “வாடா பின் லேடா’ பாட்டு இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாக உள்ளது.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…