Connect with us

CINEMA

உங்க விசுவாசத்திற்கு தயாரிப்பாளர் தான் கிடைச்சாங்களா..? ரீ என்ட்ரி கொடுத்த 80’s நடிகர் ராமராஜன் மீது எழுந்த புகார்..!!

1980, 90-களில் நடிகர் ராமராஜன் பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார் தொடர்ந்து வெள்ளி விழா படங்களை கொடுத்த பெருமை இவரை மட்டுமே சாரும். இந்நிலையில் ராமராஜனின் வெற்றிக்கு பின்னால் தூணாக இருந்தவர் இசைஞானி இளையராஜா. ராமராஜன் நடிக்கும் படங்களுக்கு காலத்தால் அழியாத அருமையான பாடல்கள் கொடுத்துள்ளார்.

   

சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜா இசையில் சாமானியன் என்ற படத்தில் நடிகர் ராமராஜன் நடித்துள்ளார். R.ராகேஷ் இயக்கும் சாமானியன் படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. சாமானியன் படத்தில் ராமராஜுடன் நடிகர் ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர், கே.ரவிக்குமார், சரவணன், சுப்பையா, லியோ, சிவா உள்ளிட்ட 25 பிரபலங்கள் நடிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து வேறு ஒரு படத்தில் ராமராஜன் கமிட் ஆகியுள்ளார். அந்த படத்தின் தயாரிப்பாளர் 40 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி ஜிப்ரனை இசை அமைக்க பேசி முடித்துள்ளார். ஆனால் தனது அடுத்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா தான் இசை அமைக்க வேண்டும் என ராமராஜன் கண்டிப்பாக கூறியுள்ளாராம்.

இதனால் படக்குழு ராமராஜனின் ஆசைப்படி அந்தப் படத்திற்கும் இளையராஜாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இதில் தயாரிப்பாளருக்கு என்ன கஷ்டம் என்றால் இளையராஜாவிற்கு 1 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர் பொருத்தவரை 60 லட்ச ரூபாய் லாஸ் தான்.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top