‘கேப்டன் மில்லர்’ கதை திருட்டு விவகாரம்.. நடிகர் வேல ராமமூர்த்தி கேட்ட நஷ்டஈடு தொகை.. அதிர்ந்துபோன படக்குழுவினர்..

By Sumathi

Updated on:

சமீபத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாட தனுஷ் படம் கேப்டன் மில்லர். வெள்ளையர் ஆட்சி கால கதை. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரித்திருந்தார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட நடிகர், நடிகையர் படத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.வன்முறை காட்சிகள் நிறைந்த படமாக கூறப்பட்ட நிலையில், கேப்டன் மில்லர் படம் இதுவரை உலகம் முழுவதும் 105 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. ஆனால் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 50 கோடிதான் கூறப்படுகிறது.

   

இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் கதை என்னுடையது என, பிரபல நடிகர் மற்றும் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி, தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில், அதன் தலைவர் கே பாக்யராஜிடம் புகார் அளித்துள்ளார். வேல ராமமூர்த்தி, பிரபல நடிகராக தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார்.

அப்பா, அண்ணாத்த, கொம்பன், புலிக்குத்தி பாண்டியன், கிடாரி என பல படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆகவும், வில்லனாகவும் நடித்திருக்கிறார். இவர் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இது மறைந்த நடிகர் மாரிமுத்து நடித்து வந்த கேரக்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், புகார் அளித்துள்ள வேல ராமமூர்த்தி எனது நாவலான பட்டத்து யானை என்ற கதையில் இருந்து, கேப்டன் மில்லர் படக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெறும் 14 காட்சிகளும், என் நாவலில் இடம்பெற்ற 14 காட்சிகளும் ஒன்றுபோலவே இருக்கின்றன என்று புகார் தெரிவித்த வேல ராமமூர்த்தி, எனது நாவலில் இருந்து எனது அனுமதியின்றி கதையை திருடியதற்கு நஷ்ட ஈடாக தனக்கு ஒரு கோடி ரூபாய், தனுஷ் படத்தின் தயாரிப்பாளர் தர வேண்டும் என, மனுவில் கூறியிருக்கிறார். இதைக்கேட்டு படக்குழு ஆடிப்போயுள்ளது.

author avatar
Sumathi