“சீமான் பொதுவேட்பாளரா?”… மனம் திறந்த சிபிஐ வீரபாண்டியன் சொன்ன பச்சையான உண்மை… இடைத்தேர்தலில் அடுத்த பரபரப்பு….!

By Nanthini on கார்த்திகை 2, 2026

Spread the love

கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் அவர்கள் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து வரவிருக்கும் போராட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார். குறிப்பாக, மார்ச் 23 ஆம் தேதி திருச்சியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து நடத்தவுள்ள மாபெரும் பேரணி கட்சியின் பலத்தை பறைசாற்றும் என்றார்.

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், அத்தொகுதியில் கடந்த தேர்தலில் குறைவான வாக்குகள் பெற்றதை சமூக வலைதளங்களில் ஏளனம் செய்வதாக குறிப்பிட்டதோடு, கம்யூனிஸ்ட்களின் உண்மையான பலத்தை மார்ச் 23 பேரணியில் பார்க்க முடியும் என தெரிவித்தார். மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே கூட்டணி மற்றும் தனித்து போட்டியிடுவது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

   

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், அவரை எதிர்க்கட்சிகள் பொதுவேட்பாளராக ஏற்பது குறித்த விவாதங்களுக்கு பதிலளித்த வீரபாண்டியன், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கட்சியின் மாநிலக்குழு கூடி தகுந்த முடிவு எடுக்கும் என்று தெளிவுபடுத்தினார்.

   

தமிழக வெற்றிக் கழகத்திற்கு அளிக்கப்பட்ட ஆதரவு தொடருமா என்ற கேள்விக்கு, ஆளுநரின் அரசியல் தலையீட்டைத் தடுக்கவும், எளிய மக்களின் தீர்ப்பை மதிக்கவுமே தவெகவுக்கு ஆதரவளித்ததாக அவர் கூறினார். தவெகவுக்கு போதிய அவகாசம் வழங்க வேண்டும் என்றும், திமுக மற்றும் அதிமுகவுடன் தவெகவை இப்போதைக்கு ஒப்பிட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

இறுதியாக, கம்யூனிஸ்ட் கட்சி எப்போதுமே தனிநபர் வெறுப்பு அரசியலை ஆதரிக்காது என்றும், உழைக்கும் மக்களின் நலனுக்காகவே தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். விமர்சனங்கள் எழுந்தாலும், தவெகவுக்கான ஆதரவை இப்போதே வாபஸ் பெறுவது சரியாக இருக்காது எனவும், அவர்கள் மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் வீரபாண்டியன் கேட்டுக் கொண்டார்.