கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு மாவட்டம் மாகடி டவுனை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் பெங்களூரில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதனிடையே இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த விகாஷ் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு பிகாஸ் இளம்பெண்ணை காதலிப்பதாக கூறிய நிலையில் முதலில் தயங்கிய மாணவி பிறகு அவருடைய ஆசை வார்த்தைகளை நம்பி காதலில் விழுந்துள்ளார். இருவரும் செல்போனில் மாறி மாறி பேசி வந்த நிலையில் மனைவியின் வீட்டில் யாரும் இல்லாத போதை விகாஷ் அங்கு சென்றுள்ளார். அப்போது முதலில் விகாஷ் மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதனை அவர் செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். அந்த வீடியோவை காட்டி மிரட்டி விகாஷ் தனது நண்பர்களான பிரசாந்த் மட்டும் சேர்த்தன் ஆகியோருடன் உல்லாசமாக இருக்கும்படி கூறியுள்ளார். இதற்கு மாணவி சம்மதிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். அத்துடன் சேர்த்தனின் வீட்டுக்கு கட்டாயப்படுத்தி மாணவியை விகாஷ் அழைத்துச் சென்று பிரசாத் மற்றும் சேத்தன் ஆகியோருடன் சேர்ந்து மாணவியை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் கடந்த அக்டோபர் மாதம் நடந்த நிலையில் இந்த வன்கொடுமை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி வெளியுலகிற்கு தெரிந்தால் என்னவாகும் என்ற அச்சத்தில் இருந்து உள்ளார். இதனால் அவர் உடனடியாக போலீசில் புகார் அளிக்காமல் இருந்த நிலையில் தன் பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் காதல் வலையில் வீழ்த்தி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த காதலன் விகாஷ், பிரசாந்த் மற்றும் சேத்தன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், சேத்தன் எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றி வந்ததும் அவருக்கு திருமணம் ஆகி மனைவி இருப்பதும், அவர் கர்ப்பமாக இருப்பதால் தற்போது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்கு சென்றுள்ள நிலையில் விகாஷ், பிரசாந்து உடன் சேர்ந்து தனது வீட்டில் வைத்து நண்பரின் காதலியை சேத்தன் கூட்டு பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…