ஐயோ இப்படி பண்ணிட்டீங்களே… நண்பனை நம்பி சென்ற கல்லூரி மாணவி… மது குடிக்க வைத்து விடிய விடிய செய்த கொடூரம்…!

By Nanthini on மார்கழி 22, 2025

Spread the love

பெங்களூரில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த தம்பதியின் மகள் அங்குள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் இரவு விருந்துக்காக அந்த மாணவியும் அவருடன் படிக்கக்கூடிய மாணவர் ஒருவரும் வெளியே சென்றுள்ளன. அப்போது அந்த மாணவர் தன்னுடன் மேலும் இரண்டு நண்பர்களை அழைத்துச் சென்றுள்ளார். பிறகு அவர்கள் அங்குள்ள ஒரு விடுதியில் அரை எடுத்து தங்கி உள்ளனர். அங்கு வைத்து மூன்று பேரும் மது குடித்ததோடு மட்டுமல்லாமல் மாணவியையும் கட்டாயப்படுத்தி அவர்கள் மது குடிக்க வைத்ததாக தெரிகிறது. மாணவியும் வலுக்கட்டாயமாக மது குடித்த நிலையில் பிறகு மது போதையில் அவர் மயங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மயங்கிய நிலையில் இருந்த மாணவியை அவருடைய நண்பரான மாணவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு அவருடைய நண்பர்களும் உடந்தையாக இருந்துள்ளன. பிறகு மயக்கம் தெளிந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மாணவி அங்கிருந்து தப்பித்துச் சென்று போலீசில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து அந்த மூன்று பேரையும் தேடிவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.