ஒட்டுமொத்த நாடே அதிர்ச்சி… காதல் வலை வீசி இளம் பெண்களை மயக்கி… நைஜீரிய வாலிபர் செய்த கொடூர செயல்… இறுதியில் நடந்த பயங்கர சம்பவம்…!

By Nanthini on மார்கழி 22, 2025

Spread the love

நைஜீரிய நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு மாணவர் விசாவில் இந்தியாவிற்கு வந்துள்ளார். காதல் என்ற பெயரில் இளம் பெண்களை மயக்கி உள்ளார். பிறகு அவர்களுக்கு போதை மருந்தை கொடுத்து தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை அவர் வழக்கமாக வைத்திருந்ததாக தெரிகிறது. இதுவரை ஆறு பெண்களை மயக்கி திருமணம் செய்துள்ளார். செய்த இளம் பெண்களை போதை பொருட்களை விற்கும் ஏஜென்ட் ஆக மாற்றினார். போதைக்கு அடிமையான இளம் பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு இலவசமாக போதைப்பொருட்களை வழங்கி வந்துள்ளார்.

அவர்களையும் போதைப் பொருள் விற்பவர்களாக மாற்றி விடுவார். ஹைதராபாத், பெங்களூர் மற்றும் கோவா என மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நகரங்களை மாற்றிக் கொண்டு வருவார். ஐந்து வீடுகளை வாடகைக்கு எடுத்து போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளார். அடிக்கடி நகரங்களை மாற்றி வந்ததால் நைஜீரிய வழிமுறை போலீசாரால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் ஹைதராபாத்தில் நர்ஸ் ஒருவர் போதைப்பொருள் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்ததால் போலீசார் அவருடைய வீட்டுக்கு சென்று சோதனை நடத்திய போது ஏராளமான போதை பொருள் சிக்கியது.

   

மேலும் நர்சை கைது செய்து விசாரித்ததில் நைஜீரிய வாலிபரின் காதலில் விழுந்த நான் ரகசிய குறியீடுகளை பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்து வந்தேன் என்று தெரிவித்துள்ளார். மும்பையில் கஞ்சா விற்பதற்கு கடல் பச்சை என்றும் போதை பொருள் தேவையா என்பதற்கு 3(???) கேள்விக்குறிகளும், போதைப்பொருள் வேண்டும் என்பவர்களுக்கு ஸ்கோர் எனும் செய்தியை அனுப்பி போதைப்பொருள் விற்பனை செய்ததாக தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நர்ஸ் மற்றும் நைஜீரிய வாலிபரை கைது செய்துள்ள நிலையில் மேலும் தலைமறைவாக உள்ள பெண்களையும் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.