திடீர் திருப்பம்… தமிழகத்தில் கூட்டணி ஆட்சி?… காங்கிரஸ் எடுக்கும் முடிவு… ப.சிதம்பரம் பரபரப்பு பேட்டி…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை கேட்பதால் கூட்டணியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் சமீப காலமாக இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இதனிடையே சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, நாங்கள் இந்தியா கூட்டணியில் இருக்கின்றோம்.

ஐந்து பேரை கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது. அவர்கள் முதலமைச்சரையும் மற்ற தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளனர். இந்தியா கூட்டணி ஒற்றுமையாக வலிமையாக தேர்தலை சந்திக்கும். இந்த தேர்தலில் எங்களுடைய கூட்டணி வெல்லும் என்பது என்னுடைய முழு நம்பிக்கை. தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்க்கு வாழ்த்துக்கள். ஆனால் அவர் முயற்சி வெற்றி பெறாது. யாருக்கும் யார் போட்டி என்பது தொகுதியை பொருத்து தான் தெரியும்.

தொகுதி பங்கீடு குறித்து திமுக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். மற்றவர்கள் கருத்து சொல்லலாம். ஆனால் முடிவு தலைவர்கள் இரண்டு பேருக்கு இடையே தான். 100 நாள் வேலைத்திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியது கண்டனத்திற்குரியது. மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள புதிய வேலை திட்டத்தின் பெயரை யாராலும் உச்சரிக்க முடியாது. ஆட்சியில் பங்கு மற்றும் கூட்டணி ஆட்சி ஏற்படுமா என்பதெல்லாம் இரண்டு கட்சி தலைவர்களும் முடிவு எடுப்பார்கள் என்று அவர் பேட்டியளித்துள்ளார்.

Nanthini

Recent Posts

தவெகவில் இணைந்த 6 முன்னாள் அதிமுக MLA-க்கள்…. இத்தனை கோடி சொத்தா?…. வாயடைத்துப்போன அரசியல் களம்….!

அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள 6 முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் சொத்து விவரங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக…

2 minutes ago

தமிழக பெண்களுக்கு ஷாக் நியூஸ்…. ரேஷன் கார்டில் தவெக அரசு செய்யப்போகும் அதிரடி மாற்றம்… இனி ‘இவர்களுக்கு’ மகளிர் உரிமைத் தொகை கிடையாது….?

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்', தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத்…

13 minutes ago

வேலுமணி, சண்முகத்திற்கே வேட்டு வச்ச இபிஎஸ்… ஆனா ‘அவருக்கு’ மட்டும் ஸ்பெஷல் சலுகை…. அதிமுகவை உலுக்கும் ஒரே ஒரு பெண் எம்.எல்.ஏ…. லீமா ரோஸ் விவகாரத்தின் ‘அக்மார்க்’ அரசியல் ரகசியம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுகவில் உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கை…

25 minutes ago

தவெக vs திமுக: முதல்வரின் முதல் பயணத்திற்கே வந்த சோதனை… கரூருக்கு கிளம்பும் முன்பே விஜய்க்கு விழுந்த முட்டுக்கட்டை… புதிய பரபரப்பை கிளப்பிய திமுக….!

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். கடந்த…

32 minutes ago

CM விஜய் தேர்ந்தெடுத்த ‘புது வழி’…. அமைச்சர்களுக்குப் போட்ட ரகசிய உத்தரவு… டெல்லி வட்டாரத்தில் பரபரப்பு… அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்….!

மத்திய அரசுடன் கொள்கை ரீதியாக மாறுபட்டாலும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு டெல்லியுடன் மோதல் போக்கைக்…

38 minutes ago

“பழிக்கு பழி… டிரம்பை கொல்வது எங்கள் பொறுப்பு”… கமேனியின் இறுதிச்சடங்கில் நடுங்க வைத்த சிவப்பு கொடிகள்…. பதறும் உலக நாடுகள்..!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கு, பல்வேறு அரசியல் மற்றும் ராணுவ நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டின்…

45 minutes ago