தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக இந்த முறை எப்படியாவது தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. அதற்காக பல வியூகங்களையும் வகுத்து வருகின்றது.
இப்படியான நிலையில் நெல்லை தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் வேறு தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் பாஜக எடுத்த சர்வேயில் தொகுதியில் உள்ள பட்டியலினத்தவர், நாடார் மற்றும் யாதவ சமூகத்தினர் இடையே அதிருப்தி நிலவுவது தெரியவந்துள்ளது இதற்கு காரணம் என்று தெரிகிறது. இதற்கு பதிலாக விருதுநகரின் சாத்தூரில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…