CM விஜய் தினமும் 20 மணிநேரம் வேலை செய்கிறார்… இணையத்தை கலக்கும் வைரல் பதிவு…!

By Swetha on ஆவணி 18, 2026

Spread the love

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை மக்களுக்காக வேலை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அவர் தினமும் அதிகாலை 4 மணிக்கே விழித்து எழுந்து, துறை சார்ந்த அமைச்சர்களுக்கு நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அன்றாட பணிகள் மற்றும் திட்டங்களின் தற்போதைய நிலவரங்கள் குறித்துத் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், விஜய் ஒரு ‘அரசியல் துறவி’ போலத் தம்மை முற்றிலும் மக்கள் பணியில் மட்டுமே அர்ப்பணித்துக் கொண்டு செயலாற்றி வருகிறார் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். அரசுத் துறைகளின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணித்து, மக்கள் நலத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துவதில் மட்டுமே அவர் முழுக் கவனத்தையும் செலுத்தி வருவதாக ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.