நடிகர் தனுஷ் எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்தால், தமிழகத்தின் பாரம்பரிய திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக களத்தில் இருக்காது என்ற ஜோதிடர் ராதன் பண்டிட்டின் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதல்வர் விஜய்யின் ஆன்மீக ஆலோசகராகவும் ஜாதக கணிப்பாளராகவும் அறியப்படும் ராதன் பண்டிட், தான் தனுஷின் ஜாதகத்தையும் பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரது கணிப்பின்படி, 2031 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் விஜய்யின் வெற்றியை அல்லது அவரது ஆட்சியை வீழ்த்துவதற்கு திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தவிர்க்க முடியாத சூழலில் ஒன்றிணைய வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால், அந்த சமயத்தில் தனுஷ் அரசியலுக்குள் நுழைந்தால், இரண்டாம் இடத்தை அவரே தட்டிப்பறிப்பார் என அவர் கணித்துள்ளார்.
ராதன் பண்டிட்டின் இந்த விசித்திரமான கணிப்பு தமிழக அரசியலிலும் திரைத்துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்கால தமிழக அரசியல் களம் திராவிடக் கட்சிகளுக்கு இடையிலான போட்டியாக இருக்காது என்றும், அது “முதல்வர் விஜய் Vs தனுஷ்” என்ற இரு பெரும் திரையுலகத் தலைவர்களுக்கு இடையிலான நேரடியாக மாறுக்கூடும் என்றும் அவர் அடித்துக்கூறியுள்ளார். ஏற்கனவே விஜய் அரசியல் நுழைவு பெற்று முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தனுஷ் ரசிகர் மன்ற நடவடிக்கைகளும் அரசியல் நகர்வுகளாகப் பார்க்கப்பட்டு வரும் சூழலில், இந்த ஜாதக கணிப்பு இணையத்தில் காரசாரமான விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், அரசுக்குச் சொந்தமான ஆவின் நிறுவனம் தனது பால் சார்ந்த உபபொருட்களின் விலையை…
கோவை பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர் அகிலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாகப்…
தமிழகத்தில் "லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம்; ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் விட்டுவிட மாட்டோம்" என்று முதலமைச்சர் விஜய்…
தமிழக வெற்றிப் கழகத்தின் கரூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் குளித்தலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.…
நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு…