தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற பெயரில் கட்சித் தொடங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, தனது ரசிகர் மன்ற இயக்கத்தை மக்கள் இயக்கமாக அவர் மாற்றியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, நிர்வாகிகளை அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை நடத்தி வரும் தனுஷ், அதன் ஒரு பகுதியாக சென்னை ஓஎம்ஆரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
சென்னை ஓஎம்ஆர் பகுதியில் அமைந்திருக்கும் ஜேப்பியர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதலில் காலை 11 மணிக்குத் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி, கொட்டும் மழையின் காரணமாக பிற்பகல் 3 மணிக்கே தொடங்கியது. இருப்பினும், மழையையும் பொருட்படுத்தாமல் திரளான பெண் நிர்வாகிகள் நீண்ட நேரம் காத்திருந்து தனுஷைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றனர்.
நிகழ்ச்சியின் போது, வருகை தந்திருந்த மகளிர் அணி நிர்வாகிகள் அனைவருக்கும் நடிகர் தனுஷ் காமாட்சி விளக்கு வழங்கி கௌரவித்தார். மேலும் அவர்களுடன் இணைந்து தனித்தனியாக புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இந்த சந்திப்பில் தனுஷ் தனது அரசியல் ரீதியான கருத்துகளையும் எதிர்கால திட்டங்களையும் விரிவாகப் பேசுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அரசியல் தொடர்பாக எதுவும் பேசாமல், நிர்வாகிகளிடம் வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே சுருக்கமாகப் பேசி முடித்தது அங்கு கூடியிருந்தவர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சி முடிந்ததும் வளாகத்தை விட்டுப் புறப்பட்ட தனுஷிடம், அங்கு காத்திருந்த செய்தியாளர்கள் “அரசியலுக்கு வருவீர்களா?” என்றும், இன்றைய நிகழ்ச்சி எவ்வாறு இருந்தது என்றும் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த தனுஷ், புன்னகையுடன் “எல்லாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என்று வாழ்த்து கூறியதுடன், இன்றைய நிகழ்ச்சி குறித்து “ரொம்ப சந்தோஷம்… ரொம்ப சந்தோஷம்…” என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அரசியல் குறித்த நேரடி கேள்விகளுக்கு அவர் பதிலளிக்காமல் தவிர்த்தாலும், அவரது அடுத்தடுத்த நகர்வுகள் திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மேகலா முத்யாலு (39), உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில்…
உத்தரப் பிரதேசம் மாநிலம் பாராபங்கியைச் சேர்ந்த பிராச்சி திவாரி என்ற பெண்ணிற்கு, கடந்த 2026 பிப்ரவரி 13 அன்று சீதாபூரில்…
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், ஆளும் கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே அரசியல் மோதல்…
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் - ஸ்வப்னா தம்பதியின் 12 வயது மகள் திவா,…
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலி தாபா, தனது கணவர் மற்றும் குழந்தையை நொய்டாவில் விட்டுவிட்டு, உத்தரப் பிரதேசத்தைச்…
கிழக்கு டெல்லியின் வினோத் நகர் பகுதியில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில், சனிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் 12.30…