கிழக்கு டெல்லியின் வினோத் நகர் பகுதியில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில், சனிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் 12.30 மணிக்குள் துணிச்சலான கொள்ளைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வாடிக்கையாளர் போல வேடமிட்டு கடைக்குள் நுழைந்த நபர் ஒருவர், கடை ஊழியர்களிடம் நகை வாங்குவது போல் நடித்துப் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
திடீரென அந்த நபர் ஊழியர்களின் கவனத்தைத் திசைதிருப்பி, அங்கிருந்த ரூ.7 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளைக் திருடிக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளார். நகைக்கடை ஊழியர்கள் சற்றும் எதிர்பாராத வகையில் இந்தச் சம்பவம் மிக விரைவாக நடந்து முடிந்துள்ளது.
https://twitter.com/PTI_News/status/2114283760787276239/video/1
இச்சம்பவம் குறித்து மண்டாவலி காவல் நிலையத்தில் நகைக்கடை உரிமையாளர் உடனடியாகப் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கடையிலுள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்து, தப்பிச் சென்ற மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், அரசுக்குச் சொந்தமான ஆவின் நிறுவனம் தனது பால் சார்ந்த உபபொருட்களின் விலையை…
கோவை பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர் அகிலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாகப்…
தமிழகத்தில் "லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம்; ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் விட்டுவிட மாட்டோம்" என்று முதலமைச்சர் விஜய்…
தமிழக வெற்றிப் கழகத்தின் கரூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் குளித்தலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.…
நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு…