விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பெண்ணைக் கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த வழக்கில் கைதான தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட இளைஞர் அணி இணை அமைப்பாளர் சரவணகுமார், கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சி மற்றும் ஆட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அத்துமீறிச் செயல்படும் நபர்கள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை பாயும் எனத் தவெக தலைவர் விஜய் எச்சரித்திருந்த நிலையில், இந்தக் குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய சரவணகுமாரின் பதவி பறிக்கப்பட்டு, அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குக் கட்சியில் இடமில்லை என்பதை உணர்த்தும் வகையிலும், கட்சியின் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையிலும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
