ரீல்ஸ் காதலால் வந்த வினை… இன்ஸ்டாகிராமில் ‘லவ் சாட்’… ஆசை வார்த்தை கூறி சிறுமி கடத்தல்… நடுரோட்டில் மடக்கிப் பிடித்து… போக்சோவில் வாலிபர் கைது…!

By Swetha on ஆடி 30, 2026

Spread the love

விருதுநகர் மாவட்டம் செங்குன்றாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த மைசுலான் என்பவரின் மகன் கருப்பசாமி (22). இவருக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கருப்பசாமி அச்சிறுமியை ஆசைகாட்டி கடத்திச் சென்றுள்ளார். வீட்டில் இருந்த சிறுமியைக் காணாமல் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார், இதுகுறித்து வாசுதேவநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தாய் அளித்த புகாரின் பேரில், போலீசார் ‘சிறுமி மாயம்’ என வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

   

போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில், சிறுமியை கடத்திச் சென்ற கருப்பசாமியை அவர்கள் கண்டுபிடித்து மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து சிறுமியை மீட்ட போலீசார், சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்திற்காக கருப்பசாமி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.