மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் விஜய் அங்கு செல்லக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கர்நாடகாவுடன் இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தினாலே, மேகதாது விவகாரத்தை ஒரு ‘இருதரப்பு பிரச்சினை’யாக ஏற்றுக்கொள்வது போல் ஆகிவிடும் என்றும், இது காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு உள்ள சட்டப்பூர்வ உரிமைகளை மொத்தமாக கர்நாடகத்திடம் தாரைவார்ப்பதற்குச் சமம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் தேசிய கட்சிகளான பாஜகவும் காங்கிரஸும் பின்னணியில் இருந்து செய்யும் அரசியல் சதியில் முதல்வர் விஜய் விழுந்துவிடக் கூடாது என எச்சரித்துள்ள அவர், தமிழகத்தின் நீர் உரிமைகளைப் பாதுகாக்க நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படியே தமிழக அரசு உறுதியான நிலைப்ாட்டை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
