மிசா சர்ச்சை….. “எதேச்சையாக நடந்தது தான்”…. உருவகேலி புகாருக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் விஜய்யின் அறிக்கை….!

By Nanthini on புரட்டாதி 8, 2026

Spread the love

சட்டப்பேரவையில் 2026 செப்டம்பர் 7 அன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், பதிலுரையாற்றிய முதல்வர் விஜய்யின் உடல்மொழி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மிசா காலத்தில் மு.க.ஸ்டாலின் தாடை உடைக்கப்பட்ட நிகழ்வை நினைவூட்டும் வகையில் முதல்வரின் உடல்மொழி அமைந்திருந்ததாகவும், அது உருவகேலி செய்யும் செயல் என்றும் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், இத்தகைய நடத்தை அரசியல் நாகரிகத்திற்கு எதிரானது எனக் கூறி திமுகவினரும் மற்றும் தோழமைக் கட்சியினரும் தொடர்ந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வந்தனர்.

இந்தக் கண்டனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல்வர் விஜய் தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். சட்டமன்ற பதிலுரையின்போது வெளிப்பட்ட தனது உடல்மொழி முற்றிலும் எதேச்சையானது என்றும், அதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம்” என்று அன்புடன் கேட்டுக் கொண்ட அவர், நாகரிக அரசியலையும் தர்மத்தையும் எப்போதும் நிலைநிறுத்தவே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.