CM விஜய்க்கு பதில் பேசும் 3 அமைச்சர்கள்?…. பேரவையில் அம்பலமான உண்மை… போட்டு தாக்கிய இபிஎஸ்….!

By Nanthini on புரட்டாதி 8, 2026

Spread the love

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், சட்டமன்றத்தில் தாம் எழுப்பியக் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் நேரடியாகப் பதிலளிக்காமல் தவிர்த்து வருகிறார் எனக் கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழக வெற்றிக் கழகமும் திமுகவும் பேரவை நேரத்தைச் சண்டையிட்டுக் கழித்து வீணடிப்பதோடு, சட்டமன்றத்தில் எத்தகைய கேள்விகள் எழுப்பப்பட்டாலும் முதலமைச்சருக்குப் பதிலாக மூன்று அமைச்சர்கள் மட்டுமே முன்வந்து பதிலளிக்கும் போக்கு நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, FQL நிறுவனத்தின் மூலம் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.1000 கோடி மதிப்பவிலான நிதி மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பான கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் எந்தவிதப் பதிலையும் அளிக்காமல் மவுனம் காப்பதாக இ.பி.எஸ் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.