அடுத்த விக்கெட் ரெடி…. முதல்வர் விஜய் போட்ட ரகசிய ஸ்கெட்ச்… திமுக கோட்டையை உலுக்கப் போகும் அந்த ‘டாப் சீக்ரெட்’ விபரம்…!

Spread the love

தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அதிரடி திருப்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே, முந்தைய தி.மு.க ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களான கே.என். நேரு மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் மீதான ஊழல் வழக்குகளைத் தூசு தட்டத் தொடங்கியுள்ளார். குறிப்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளின் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட கைது நடவடிக்கைகளுக்கான அனுமதியைப் பெற ஆளுநரை அணுக முதல்வர் தரப்பு தயாராகி வருவதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது “ஊழல் மற்றும் குடும்ப அரசியலை வேரறுப்போம்” என்று மக்கள் மத்தியில் முழங்கிய விஜய், தற்போது அதனைச் செயலில் காட்டத் தொடங்கியுள்ளார். நகராட்சி நிர்வாகத் துறை வேலைவாய்ப்பு முறைகேடு வழக்கில் கே.என். நேரு மீது எடுக்கப்பட்ட வேகமான நடவடிக்கைகள் ஒட்டுமொத்த எதிர்க்கட்சி முகாமையும் அதிர வைத்துள்ளது. இந்த வரிசையில், கடந்த ஆட்சியில் பல்லாயிரம் கோடி ரூபாய் டெண்டர் மற்றும் நிர்வாக முறைகேடுகளில் நேரடியாகத் தொடர்புடைய தி.மு.க-வின் மிக முக்கியத் தூணாகக் கருதப்படும் மற்றொரு மூத்த முன்னாள் அமைச்சரைக் கைது செய்வதற்கான டாப் சீக்ரெட் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

தலைமைச் செயலக உயர் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், “மக்களின் பணத்தைச் சூறையாடி ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சிறைக்கம்பிகளை எண்ணுவது உறுதி” என முதல்வர் விஜய் மிகக் காரசாரமாக உத்தரவிட்டுள்ளார். அரசியல் பழிவாங்கல் என்ற விமர்சனங்கள் எழ வாய்ப்பு உள்ளதால், எந்தவொரு சட்ட ஓட்டைகளும் இல்லாதபடி பக்காவான ஆவணங்களுடன் இந்த வழக்கை நகர்த்த சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் புதிய அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆகியோருடன் முதல்வர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் அடுத்த விக்கெட் யாருடையது என்ற கலக்கமும், திக் திக் பயமும் தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டுள்ளது.

ஆட்சி மாற்றத்திற்குப் பின் பழைய வழக்குகளைக் காட்டி புதிய அரசு மிரட்டுகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினாலும், “ஊழலற்ற தூய்மையான நிர்வாகம்” என்ற தனது இமேஜைக் காப்பாற்றிக் கொள்ள விஜய் எடுக்கும் இந்த அடுத்தடுத்த அதிரடி முடிவுகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சட்டத்தின் முன் யாரையும் தப்பிக்க விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் முதல்வர் விஜய்யின் இந்த அடுத்த அதிரடிப் பாய்ச்சல், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில வாரங்களில் கோட்டை வட்டாரத்திலிருந்து வெளிவரப் போகும் அந்த ‘பிக் பிரேக்கிங்’ அறிவிப்புக்காக ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலோடு காத்திருக்கிறது.

Nanthini

Recent Posts

நான் திருநங்கையா..? எல்லோரும் அப்படித்தான் சொல்றாங்க.. நடிகை குஷ்புவின் மகள் அனந்திதா வேதனை..!!

பிரபல நடிகை குஷ்புவின் மகள் அனந்திதா, தான் உடல் எடையைக் குறைத்த பிறகு சமூக வலைதளங்களில் தன்னை 'திருநங்கை போல்…

4 minutes ago

ஏற்கனவே 2 மனைவிகள், 3 பிள்ளைகள்.. 45 வயது ஆசாமியிடம் சிக்கிய 15 வயது சிறுமி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. திடுக்கிடும் பின்னணி..!!

காஞ்சிபுரம் மாவட்டம் மல்லிகாபுரம் கிராமத்தில் கடந்த 13-ஆம் தேதி புனித அந்தோணியார் ஆலயத் தேர் திருவிழாநடைபெற்றது. இந்த திருவிழாவை பார்க்க…

8 minutes ago

தூத்துக்குடியில் நள்ளிரவில் பயங்கரம்..! விசாரணைக்குச் சென்ற எஸ்.ஐ மற்றும் காவலருக்கு அரிவாள் வெட்டு… சிறுவன் உட்பட 3 பேர் கைது..!!

தூத்துக்குடி நேரு காலனி பகுதியில் தொழிலாளி ஒருவரின் வீட்டின் மீது மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலைத் தீயிட்டு வீசிவிட்டுத்…

15 minutes ago

சென்னையில் முதியவர்களுக்கு குட் நியூஸ்… ஜூன் 21 முதல் இலவச பேருந்து டோக்கன் விநியோகம்… என்னென்ன ஆவணங்கள் தேவை தெரியுமா…? முழு விவரம் உள்ளே…!!

தமிழக அரசின் சார்பில் மூத்த குடிமக்கள் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை இலவச…

16 minutes ago

பிறந்து 56 நாட்களே ஆன குழந்தையை தூங்க வைக்க பேன் போட்ட தந்தை… அடுத்த நொடியே துடிதுடித்து பலி… பெரும் சோகம்..!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, பிறந்து 56 நாட்களே ஆன தனது குழந்தையைத் தூங்க வைப்பதற்காக மின்விசிறியைப் போட்ட தந்தை…

24 minutes ago

“சட்டமன்றத்திற்குள் நுழைந்த ‘குட்டி TVK’.. பெண் MLA-க்கள் செய்த செயலால் நெகிழ்ந்துபோன கோட்டை”..!!

தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர், ஜூன் 18, 2026 அன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களின் உரையுடன்…

24 minutes ago