“விஜய் மேஜையில் இருக்கும் அந்த 3 ஃபைல்கள்”…. வெளியானதும் சிதறப்போகும் திமுக?… தவெகவின் அடுத்த அதிரடி வியூகம்… அலறும் அறிவாலயம்….!

Spread the love

தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆட்சிக்கால முறைகேடுகள் குறித்த அறிக்கைகள் மற்றும் ஆதாரங்கள் தமது மேஜையில் இருப்பதாக முதலமைச்சர் விஜய் சமீபத்தில் தெரிவித்திருந்த கருத்து பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சியினர் ஆதாரம் கோரிய நிலையில், தகுந்த நேரத்தில் அவை மக்கள் மன்றத்தில் வெளியிடப்படும் என்றும், தற்போதைக்கு இடைத்தேர்தல் நிலவரங்களை உற்றுநோக்கி அமைதி காப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நகர்வு, வெறும் அரசியல் பேச்சாக இல்லாமல், வரவிருக்கும் இடைத்தேர்தலை மையமாகக் கொண்டு திட்டமிடப்பட்ட ஒரு வியூகமாகவே பார்க்கப்படுகிறது.

தற்போது காலியாக உள்ள 7 தொகுதிகளில் 5 தொகுதிகளுக்கான தேர்தல் வழக்குகளின் இடைக்காலத் தடை நிறைவடையும் தருவாயில் உள்ளதால், மிக விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 107 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெறாத தமிழக வெற்றி கழகம் (தவெக), பிற தோழமைக் கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சியை அமைத்துள்ளது. எனவே, இந்த 7 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது தவெகவின் ஆட்சி ஸ்திரத்தன்மைக்கு மிகவும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.

கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் தவெக அரசின் செயல்பாடுகளுக்குத் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருவதால், எந்த நேரத்திலும் அரசியல் சூழல் மாறக்கூடும் என்ற பதற்றம் நிலவுகிறது. இந்த இடைத்தேர்தலில் தவெக அதிக இடங்களைக் கைப்பற்றினால் சட்டமன்றத்தில் அதன் பலம் 114 ஆக உயரும். இதன் மூலம் தோழமைக் கட்சிகளின் தயவை பெருமளவு குறைத்துக் கொண்டு, 5 ஆண்டு கால ஆட்சியை எவ்வித அச்சுறுத்தலுமின்றி பாதுகாப்பாகத் தொடர முடியும் என அக்கட்சியின் தலைமை கணக்கு போடுகிறது.

பொதுவாக இடைத்தேர்தல்கள் ஆளும்கட்சிக்குச் சாதகமாக அமைவது வழக்கம் என்றாலும், இம்முறை முழுமையான வெற்றியைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் விஜய் அரசுக்கு உள்ளது. தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன், எதிர்க்கட்சிகள் மீதான ஊழல் ஃபைல்களைப் பொதுவெளியில் வெளியிட்டு, அவர்களின் பிம்பத்தைச் சரித்து, தவெகவின் செல்வாக்கை மேலும் உயர்த்தும் அரசியல் காய்களை முதலமைச்சர் விஜய் நகர்த்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

அவங்கள சும்மா விடாதீங்க சார்… என் மகள சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க… 3 மாத கர்ப்பிணி அதிகாரியின்… மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கதறல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago

“அக்கா… ஓலாவைப் பார்த்துக்கோங்க… என்கிட்ட இந்த 50,000 ரூபாய் மட்டும்தான் இருக்கு… நெட்டிசன்களை உருக வைத்த சிறுவனின் லெட்டர்…!”

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…

6 மணத்தியாலங்கள் ago

அரசியல் என்ட்ரி உறுதியா?… “நல்லது செய்ய கட்சி தேவையில்லை!”… உண்மையை உடைத்த ரவி மோகன்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…

6 மணத்தியாலங்கள் ago

அடியே… எங்க போன் எங்கடி?… நர்ஸ் கல்லூரியில் நள்ளிரவில் அடிதடி… மாணவிகள் இடையே பயங்கர மோதல்… ஆந்திரப் பிரதேசத்தின் பரபரப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…

6 மணத்தியாலங்கள் ago

திருமணம் கேட்டதால் விபரீதம்… பார்சலில் போன உடல்… பாத்திரத்தில் வெந்த தலை… சினிமா காட்சியை மிஞ்சிய கூடுவாஞ்சேரி பயங்கரம்…!!

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ காப்பாத்துங்க… டேங்கர் லாரியில் சிக்கித் துடித்த முதியவர்… காசர்கோட்டில் பயங்கர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… !

காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…

7 மணத்தியாலங்கள் ago